Rs 908 crore notice to MP Jagathrakshakan | 2017 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஒரு ஷெல் நிறுவனத்தில் ரூ. 42 கோடி முதலீடு செய்தது, சிங்கப்பூர் வெளிநாட்டு பங்குகளை வாங்கியது ஆகியவை தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
Rs 908 crore notice to MP Jagathrakshakan | 2017 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஒரு ஷெல் நிறுவனத்தில் ரூ. 42 கோடி முதலீடு செய்தது, சிங்கப்பூர் வெளிநாட்டு பங்குகளை வாங்கியது ஆகியவை தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
Published on: August 28, 2024 at 9:10 pm
Updated on: August 28, 2024 at 9:20 pm
Rs 908 crore notice to MP Jagathrakshakan | திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக FEMA (Foreign Exchange Management Act) வழக்கில், ரூ. 908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
FEMA அதிகாரிகள் 2020 செப்டம்பர் 11-ஆம் தேதியன்று திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அவரது குடும்ப உறுப்பினர்களும் வைத்திருந்த ரூ. 89.19 கோடி மதிப்புள்ள சொத்துகளை தற்காலிகமாக பறிமுதல் செய்தனர்.
ஆனால், 2021 பிப்ரவரி 3-ஆம் தேதி Competent Authority இந்த பறிமுதல் கட்டளையை ரத்து செய்தது. அமலாக்கத் துறை இதை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
தொடர்ந்து, 2021 டிசம்பர் 1-ஆம் தேதியன்று FEMA பிரிவு 16-க்கு கீழ் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. அதில், 2017-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ரூ. 42 கோடி முதலீடு மற்றும் இலங்கையில் ரூ. 9 கோடி முதலீடுகள் குறித்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
இதில், 2024 ஆகஸ்ட் 26-ஆம் தேதியன்று, FEMA விதிகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்றிய பிறகு, சொத்துப் பறிமுதல் மற்றும் ரூ. 908 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க லண்டன் புறப்பட்டார் அண்ணாமலை: தமிழக பா.ஜ.க.வில் அடுத்து என்ன?
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com