தாய்லாந்தில் திருவிழாவில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர்.
தாய்லாந்தில் திருவிழாவில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர்.
Published on: December 15, 2024 at 9:56 am
Thailand Bomb blast | தாய்லாந்தின் தக் மாகாணம் உம்பாங் நகரில் நடைபெற்ற வருடாந்திர திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கலவரம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த சிலர் அந்த கூட்டத்திற்குள் வெடிகுண்டு வீசினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உடல் சிதறி பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் அடைந்தனர்.
மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க துருக்கி; ராணுவ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ;6 பேர் பலி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com