தென்மேற்கு மாகாணமான இஸ்பார்டாவில் திங்கள்கிழமை நடந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
தென்மேற்கு மாகாணமான இஸ்பார்டாவில் திங்கள்கிழமை நடந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
Published on: December 10, 2024 at 12:32 pm
Turkey Military planes collide | துருக்கியின் இஸ்பார்டா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் இரண்டு துருக்கிய ராணுவ ஹெலிகாப்டர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு ஹெலிகாப்டர் கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது.
அதேசமயம் மற்றொரு ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது. எனினும் இந்த விபத்தில் ராணுவ ஜெனரல் உள்பட 6 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com