ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு உட்பட 23 பேர் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு உட்பட 23 பேர் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Published on: December 15, 2024 at 12:13 pm
Updated on: December 16, 2024 at 5:30 pm
Armstrong Murder Case | தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 23 பேர் பூந்தமல்லி துணைச் சிறையில் இருந்து புழல் சிறைக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) மாநிலத் தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் அவரது வீட்டின் அருகே ஒரு கும்பலால் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை நடந்த மூன்று மணி நேரத்திற்குள் போலீசார் விரைந்து செயல்பட்டு எட்டு பேரை கைது செய்தனர்.
தேசியக் கட்சித் தலைவர் பொது இடத்தில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதுடன், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக குற்றச்சாட்டுகளை தூண்டியது.
கடந்த ஆண்டு பட்டப்பகலில் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பிதான் பொன்னை பாலு.
ஆற்காடு சுரேஷின் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலையானது ‘பழிவாங்கும் கொலை’ என்றே இதுவரை சென்னை காவல்துறை கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க தாய்லாந்து ; திருவிழாவில் நிகழ்ந்த கோர சம்பவம் ; 3 பேர் பலி, 50 பேர் படுகாயம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com