BSNL | பி.எஸ்.என்.எல் 4ஜி சிம் வீடு தேடிவரும்; ஆன்லைனில் விண்ணப்பிப்பது பற்றி பார்க்கலாம்.
BSNL | பி.எஸ்.என்.எல் 4ஜி சிம் வீடு தேடிவரும்; ஆன்லைனில் விண்ணப்பிப்பது பற்றி பார்க்கலாம்.
Published on: September 19, 2024 at 7:04 pm
BSNL | LILO செயலி மற்றும் வாட்ஸ்அப் வசதிகளுடன் பி.எஸ்.என்.எல். சிம் கார்டு பெறுவது எளிதாக இருந்ததில்லை. ஆனால், தற்போது நீங்கள் கேரளாவிலோ அல்லது புனேயிலோ எங்கு இருந்தாலும், உங்கள் சிம் கார்டை விரைவாக ஹோம் டெலிவரி மூலம் பெற்று பி.எஸ்.என்.எல்-ன் இன் 4ஜி சேவைகளை பெறலாம்.
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது பல மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்ஐடியா போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பி.எஸ்.என்.எல். பல மலிவு விலை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
பி.எஸ்.என்.எல். இந்தியா முழுவதும் சுமார் 25,000 4ஜி டவர்களை நிறுவியுள்ளதாகவும், டாடாவின் ஆதரவுடன் இந்த செயல்முறையை விரைவுபடுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஒத்துழைப்பு பி.எஸ்.என்.எல்- ன் 4ஜி நெட்வொர்க்கை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்குவதற்கும், வேகமாகவும் நம்பகமாகவும் இணைய சேவைகளை வழங்குவதற்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவற்றை அனுபவிக்க எளிதாக இருக்கும் வகையில் உங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைனில் அப்ளை செய்து ஹோம் டெலிவரியில் சிம்கார்டை பெற முடியும்.
அப்ளை செய்வது எப்படி?
நீங்கள் பி.எஸ்.என்.எல். சிம் வாங்க நினைத்தால், LILO செயலி மூலம் ஆன்லைனில் 4ஜி சிம் கார்டை ஆர்டர் செய்யலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இரண்டிற்கும் இது கிடைக்கும். இதன் மூலம் பி.எஸ்.என்.எல். 4ம் சிம் வாங்கவும், எண்ணை போர்ட் செய்யவும் மற்றும் சிம் கார்டை ஹோம் டெலிவரி செய்யவும் உதவுகிறது.
இந்த செயலியில் பெற விரும்பம் இல்லையா? இன்னும் எளிதாக வாட்ஸ்அப் -ல் 8891767525 என்ற எண்ணுக்கு ‘ஹாய்’ என்று ஒரு மெசேஜ் செய்தால் மட்டும் போதும், உங்கள் சிம் கார்டை சுலபமாக ஆர்டர் செய்து ஹோம் டெலிவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : இந்த ஜியோ திட்டம் தெரியுமா? 84 நாள்கள் நெட்பிளிக்ஸ் இலவசம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com