Reliance Jio | தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை ஜூலை மாதத்தில், ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கான மொபைல் கட்டணங்களை உயர்த்தின. இந்த விலைப் பட்டியல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பி.எஸ்.என்.எல் மலிவான ரிசார்ஜ் திட்டங்களை வழங்கியது. இதனால், பலர் பி.எஸ்.என்.எல் திட்டத்துக்கு மாறினார்கள்.
இதற்கிடையில், மீண்டும் முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பல்வேறு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வரம்பற்ற அழைப்பு, 2 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான இலவச அணுகலை வழங்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தற்போது, ரிலையன்ஸ் ஜியோ ரூ.999 மற்றும் ரூ.899 விலையில் இரண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது, ஒவ்வொன்றும் சுமார் 90 நாட்கள் சேவையை வழங்குகிறது.
ரூ.999 ரீசார்ஜ் திட்டம்
- 2ஜிபி தினசரி டேட்டா (மொத்தம் 196ஜிபி)
- வரம்பற்ற அழைப்பு
- ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்
- ஜியோவின் 5ஜி நெட்வொர்க் உள்ள பகுதிகளில் வரம்பற்ற 5ஜி டேட்டா
- இந்தத் திட்டம் 98 நாட்களுக்குள் மொத்தமாக 196GB டேட்டாவை வழங்குகிறது.
ரூ.899 திட்டம்
- ரூ.899 திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும். இதில் அடங்கும்:
- தினசரி 2ஜிபி டேட்டா
- வரம்பற்ற அழைப்பு
- ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்
- கூடுதல் 20ஜிபி போனஸ் டேட்டா
இந்தத் திட்டம் தினசரி டேட்டா மற்றும் போனஸ் டேட்டாவை உள்ளடக்கிய 90 நாட்களில் மொத்தம் 200ஜிபி டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Jios latest 90 days plan: இந்தத் திட்டம் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ், 200 ஜிபி மொத்த அதிவேக டேட்டா உள்ளிட்டவற்றை வழங்குகிறது. மேலும்,…
BSNL Recharge: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பி.எஸ்.என்.எல்.லின் ரூ.397 ரீசார்ஜ் திட்டம் குறித்த தெரியுமா? இந்தத் திட்டத்தில் இலவச டேட்டா, அழைப்புகள் என 150 நாட்கள்…
BSNL new affordable plan: நாம் பார்க்கப் போகும் இந்த பி.எஸ்.என்.எல் ரீசார்ஜில் 160 நாள்கள் வேலிடிட்டி, ப்ரீ கால் மற்றும் தினமும் 2ஜி.பி டேட்டா கிடைக்கும்….
Reliance Jio: ஜியோவின் இந்த சிறந்த திட்டத்தில் ரூ.895க்கு ரீசார்ஜ் செய்தால் சிம் 11 மாதங்கள் முழுவதும் செயலில் இருக்கும். இந்த ரீசார்ஜ் தெரியுமா?…
Jios 98 days plan: ரிலையன்ஸ் ஜியோவின் இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 98 நாள்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அது என்ன திட்டம்? அதன் விலை…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்