அபிஷேக் பச்சனுக்கு மாதந்தோறும் ரூ.18 லட்சம் வழங்கும் எஸ்.பி.ஐ: ஏன் தெரியுமா?

Abhishek Bachchan | அபிஷேக் பச்சனுக்கு எஸ்.பி.ஐ மாதந்தோறும் ரூ.18 லட்சம் வழங்கி வருகிறது.

Published on: October 6, 2024 at 8:00 am

Abhishek Bachchan | அமிதாப்-ஜெயா தம்பதியரின் மகன் அபிஷேக் பச்சன். இவர் குரு, தூம், பணடி அவுர் பப்லி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மேலும், படத் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார். இதுமட்டுமின்றி பிசினஸ் மற்றும் விளையாட்டு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்திவருகிறார்.

இவர், 2007ல் ஐஸ்வர்யா ராய்-ஐ திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் மாதந்தோறும் அபிஷேக் பச்சன் எஸ்.பிஐ வங்கியில் இருந்து ரூ.18 லட்சம் பெறுகிறார். இது ஏன் என்று பார்க்கலாம்.

ரூ.18 லட்சம் பெறுவது ஏன்?

அபிஷேக் பச்சனின் ஆடம்பரமான ஜூஹு பங்களாவை எஸ்.பி.ஐ வாடகைக்கு எடுத்துள்ளது. இந்தப் பங்களாவின் மதிப்பு ரூ.280 கோடி என்று கூறப்படுகிறது. இதன் குத்தகை 15 ஆண்டுகள் ஆகும். இந்த நிலையில், எஸ்.பி.ஐ வங்கி அபிஷேக் பச்சனுக்கு வாடகையாக ரூ.18 லட்சம் வழங்குகிறது.
இதனால் அபிஷேக் பச்சன் குடும்பத்துக்கு கணிசமான பணம் வாடகை மூலமாக வந்து சேர்கிறது.

இது தொடர்பான அறிக்கையில், பாரத ஸ்டேட் வங்கி. அபிஷேக் பச்சனுக்கு தற்போது வங்கியில் இருந்து மாத வாடகையாக ₹18.9 லட்சம் அளிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. குத்தகையில் குறிப்பிட்ட காலகட்ட வாடகை உயர்வுக்கான ஏற்பாடுகள் உள்ளன, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாத வாடகை ₹23.6 லட்சமாக உயரும், மேலும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ₹29.5 லட்சமாக அதிகரிக்கும் எனபது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

இரவு நேர சடங்கு.. 2027 ஆஸ்கர் போட்டியில் கோந்தல்.. இப்படத்தின் சிறப்பு என்ன? Gondhal

இரவு நேர சடங்கு.. 2027 ஆஸ்கர் போட்டியில் கோந்தல்.. இப்படத்தின் சிறப்பு என்ன?

Gondhal: ஆஸ்கர் 2027 போட்டிக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாக கோந்தல் (Gondhal) திரைப்படம் தேர்வாகியுள்ளது. இது, மராத்தி சினிமாவுக்கு சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுகிறது….

இதை பண்ண முடியுமா? காலா ராதிகா ஆப்தே சந்தித்த மோசமான சினிமா அனுபவம்! Radhika Apte

இதை பண்ண முடியுமா? காலா ராதிகா ஆப்தே சந்தித்த மோசமான சினிமா அனுபவம்!

Radhika Apte: “உள்ளாடையுடன் ஆக்‌ஷன் காட்சி எடுக்கக் கேட்டனர்” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே பகீர் அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்….

கரீனா கபூர் கேரியரில் மிகக்குறைந்த ஓபனிங் வசூல்? தாய்ரா சறுக்கியது எப்படி? Daayra box office day 1

கரீனா கபூர் கேரியரில் மிகக்குறைந்த ஓபனிங் வசூல்? தாய்ரா சறுக்கியது எப்படி?

Daayra box office day 1 : நடிகை கரீனா கபூர் கேரியரில் தாய்ரா திரைப்படம் முதல் நாளில் மிகவும் குறைவான வசூல் செய்த படமாக பதிவாகியுள்ளது….

₹2 கோடியில் தயாரிக்கப்பட்டு ₹307 கோடி வசூலித்த திரைப்படம்.. Hanuman Ansh

₹2 கோடியில் தயாரிக்கப்பட்டு ₹307 கோடி வசூலித்த திரைப்படம்..

Hanuman Ansh: ஹனுமான் அன்ஷ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், 42வது நாளில் ரூ.309 கோடி வசூலை எட்டியுள்ளது….

₹300 கோடி வசூல்.. பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த மிர்சாபூர்! Mirzapur

₹300 கோடி வசூல்.. பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த மிர்சாபூர்!

Mirzapur: பங்கஜ் திரிபாதியின் மிர்சாபூர் திரைப்படம் ரூபாய் 300 கோடி வசூலித்து பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com