Airtel Recharge | ஏட்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் 365 நாட்கள் செல்லுபடியாகும் மலிவு விலை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
Airtel Recharge | ஏட்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் 365 நாட்கள் செல்லுபடியாகும் மலிவு விலை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
Published on: October 28, 2024 at 4:06 pm
Airtel Recharge | இந்திய தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோவுக்கு போட்டியாக ஏட்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மலிவு விலை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு இடையேயான போட்டியில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தமுறை ஏர்டெல் புதிய மலிவு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
நீண்ட கால வேலிடிட்டி கொண்ட திட்டத்தை விரும்புபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்யும் தொந்தரவிலிருந்து விடுபடும் வகையில், ஏர்டெல் பல வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. மாதாந்திர ரீசார்ஜ்களை விட நீண்ட கால செல்லுபடியை விரும்பும் பயனர்களுக்கு இதுபோன்ற ஒரு திட்டம் பொருத்தமாக இருக்கும்.
ஏர்டெல்லின் 365-நாள் ரீசார்ஜ் திட்டம்
365 நாள் வேலிடிட்டியுடன் ரூ.1,999 விலையில் புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்றை ஏர்டெல் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் மாதாந்திர ரீசார்ஜ் செய்யும் அவசியம் இல்லை. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் வழங்கப்படுவதோடு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்ப முடியும்.
இத்திட்டத்தில், கூடுதலாக ஆண்டு முழுவதற்கும் 24ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது மாதத்திற்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது குறைந்த அளவாக தோன்றினாலும், வீட்டில்பிராட்பேண்ட் இணைப்புகளை வைத்திருப்பவர்கள் மற்றும் மொபைல் டேட்டாவை அதிகம் பயன்படுத்தாதவர்களுக்கு இது ஏற்றது.
இதனுடன், பொழுதுபோக்கிற்கான இலவச ஏர்டெல் ஸ்ட்ரீமிங், இலவச ஹலோ ட்யூன்கள் மற்றும் சுகாதார சேவைகளுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கில் மெம்பர்ஷிப் ஆகியவற்றையும் பெறுகின்றனர்.
ரிலையன்ஸ் ஜியோவின் போட்டி ரீசார்ஜ் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1,899 விலையில் 336 நாள் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்திலும் 24 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இருப்பினும், ஒப்பிட்டு பார்க்கும்போது, ஏர்டெல் சிறந்த மதிப்பை வழங்குகிறது. சில கூடுதல் ரூபாய்களுக்கு, 365 நாட்கள் செல்லுபடியாகும் முழு ஆண்டு நன்மைகளை வழங்குகிறது.
சுருக்கமாக, ஏர்டெல்லின் ரூ.1,999 திட்டம் வரம்பற்ற அழைப்புகள், அடிப்படை டேட்டா பயன்பாடு மற்றும் மாதாந்திர ரீசார்ஜ்களின் தொந்தரவு இல்லாமல் நீண்ட கால செல்லுபடியாகும் பயனர்களுக்கு ஏற்றது.
இதையும் படிங்க பேன்சி நம்பர் முதல் நெட்வொர்க் வரை.. BSNL 7 புதிய சேவைகள்: செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com