தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on: September 3, 2024 at 10:32 am
Tamil Nadu rain Alert | தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மிதமான மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, “திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்கள் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த சில மணி நேரத்துக்கு சென்னையில் வானம் பகுதியளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மட்டுமின்றி சில இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப நிலையை பொறுத்தவரை அதிகப்பட்சமாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் தோராயமாக 26-27 டிகிரி செல்சியஸூக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக லேசான மழைப் பொழிவு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த அனுமதி: தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com