2026 சட்டமன்ற தேர்தல்.. வட சென்னையில் விஜய் போட்டி?

Assembly Election 2026: 2026 சட்டமன்ற தேர்தலில் வடசென்னை விஜய் போட்டியிடலாம் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: March 4, 2026 at 12:22 pm

சென்னை, மார்ச் 4 2026: தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெற்றி கழகம் (TVK) தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வலுவான கருத்துகளை வெளியிட்டுள்ளார். இந்ததேர்தலை சாதாரண ஜனநாயக நிகழ்வாக அல்லாமல், தன்னுக்கும் தன்னை நேசிக்கும் மக்களுக்கும் ஒரு உணர்ச்சி மிகுந்த வரலாற்று தருணம் எனக் குறிப்பிட்டார்.

விஜய் வலியுறுத்தியதாவது,

பலருக்கு தேர்தல் ஒரு அரசியல் நிகழ்வாக இருக்கலாம், ஆனால் தன்னுக்கும் தன்னை நேசிக்கும் மக்களுக்கும் அது ஒரு “அலைபோன்ற உணர்ச்சி”. 2026 தேர்தல் “ஊழலுக்கு எதிரான போராட்டம்” என அறிவித்துள்ள விஜய், இதன் மூலம் ஆளும் திமுக மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நேரடியாக எதிராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

இந்தத் தேர்தல் “50 ஆண்டுகளில் ஒருமுறை நடைபெறும் தேர்தல்” எனக் கூறி, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமான தருணமாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். விஜய் வட சென்னை தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாகவும், பெரம்பூரைத் தேர்வு செய்ய வேண்டும் எனக் கட்சித் தொண்டர்கள் வலியுறுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: அய்யா வைகுண்டர் வழி நடப்போம்.. அண்ணாமலை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com