Vijay questions in Vengaivayal case |வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
Vijay questions in Vengaivayal case |வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
Published on: January 26, 2025 at 4:31 pm
வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய், வேங்கைவயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் குழு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், வேங்கைவயல் விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடும் நபர்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் குற்றத்தில் ஈடுபட்ட உண்மை நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வருங்காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அது மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள விஜய், இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயலில் குடிக்கும் நீரில் சிலர் மனிதக் கழிவுகளை கலந்தனர். இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பகுதியை சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த நிலையில், வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com