Personal loans interest rates: பெர்ஷனல் லோன் தேவைப்படும் நபர்கள் இந்த 6 வங்கிகளின் வட்டி விகிதங்களை செக் பண்ணவும். இதில் நாட்டின் முன்னணியில் உள்ள 6 வங்கிகளின் வட்டி விகிதங்கள் உள்ளன.
Personal loans interest rates: பெர்ஷனல் லோன் தேவைப்படும் நபர்கள் இந்த 6 வங்கிகளின் வட்டி விகிதங்களை செக் பண்ணவும். இதில் நாட்டின் முன்னணியில் உள்ள 6 வங்கிகளின் வட்டி விகிதங்கள் உள்ளன.
Published on: January 26, 2025 at 3:26 pm
Updated on: January 26, 2025 at 3:30 pm
பெர்ஷனல் லோன் வட்டி விகிதம்: தனிநபர் கடன் வாங்க விரும்புபவர்கள் முதலில் வட்டி விகிதங்களை மற்ற வங்கிகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது அவசியம். தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுகிறது. மேலும், கடனுக்கு விண்ணப்பிப்பவரின் கிரெடிட் ஸ்கோரை பொறுத்தும் வட்டி விகிதம் மாறுபடுகிறது.
இரண்டு வெவ்வேறு வங்கிகளில் வசூலிக்கப்படும் வட்டிகளின் பேஸ் பாய்ண்ட் 50 புள்ளிகள் மாறுபட்டு இருந்தாலும் அது நீண்ட காலத்திற்கு கணிசமான வித்தியாசத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வெவ்வேறு வங்கிகளில் தனிநபர் கடன்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஐசிஐசிஐ வங்கி
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஆண்டுக்கு 10.85 சதவீதம் முதல் 16.65 சதவீதம் வரை வசூலிக்கிறது. கடன் தொகையில் செயலாக்கக் கட்டணங்கள் 2 சதவீதம் வரை வசூலிக்கின்றன.
கோடக் மஹிந்திரா வங்கி
கோடக் மஹிந்திரா வங்கி ஆண்டுக்கு 10.99 சதவீதம் முதல் 16.99 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. அதே நேரத்தில் செயலாக்கக் கட்டணங்கள் கடன் தொகையில் 5 சதவீதம் வரை இருக்கும்.
எச்டிஎஃப்சி வங்கி
மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி தனிநபர் கடன்களுக்கு 10.85 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா(SBI)
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பெருநிறுவன ஊழியர்களிடம் 12.60 முதல் 14.60 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு 11.60 சதவீதம் முதல் 14.10 சதவீதம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.வெவ்வேறு வகை ஊழியர்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்கள் உள்ளன.
ஆக்சிஸ் வங்கி
தனியார் வங்கியான ஆக்சிஸ் தனிநபர் கடன்களுக்கு 10.55 சதவீதம் முதல் 21.80 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி தனிநபர் கடன்களுக்கு 12.50 முதல் 14.50 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது.
வங்கி | வட்டி விகிதங்கள் (%) |
---|---|
ஐசிஐசிஐ வங்கி | ஆண்டுக்கு 10.85% முதல் 16.65% வரை |
கோடக் மஹிந்திரா வங்கி | ஆண்டுக்கு 10.99% முதல் 16.99% வரை |
எச்டிஎஃப்சி வங்கி | 10.85 முதல் 24% |
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா | 12.60 முதல் 14.60% (கார்ப்பரேட் ஊழியர்களுக்கு) |
ஆக்ஸிஸ் வங்கி | 10.55 முதல் 21.80% வரை |
பஞ்சாப் நேஷனல் வங்கி | 12.50 முதல் 14.50% வரை |
செயலாக்கக் கட்டணங்கள் (Processing charges)
வட்டி விகிதங்களைத் தவிர, கடன் வாங்குபவர்கள் செயலாக்கக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கடன் வழங்கப்படும் தொகையில் 0.5 – 2.5 சதவீதம் வரை இருக்கும். இந்தக் கட்டணம் பொதுவாக கடன் வழங்கும் நேரத்தில் கழிக்கப்படும்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com