Vanathi Srinivasan: கரூரை விட விஜய்க்கு டெல்லியில் பாதுகாப்பு அளிக்கப்படும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Vanathi Srinivasan: கரூரை விட விஜய்க்கு டெல்லியில் பாதுகாப்பு அளிக்கப்படும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Published on: January 11, 2026 at 11:07 pm
சென்னை ஜனவரி 11, 2026; கரூரை விட டெல்லியில் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவும் ஆன வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி சனிக்கிழமை, நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவரைக் காண பெரும் கூட்டம் கூடியது; இந்தக் கூட்டத்தில் இரவு தள்ளு கொண்டு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் (குழந்தைகள் பெண்கள் உட்பட) உயிரிழந்தனர்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தார்கள். இந்தக் கூட்ட நெரிசலுக்கு காரணம் போதிய பாதுகாப்பு வழங்கப்படாததே என தமிழக வெற்றி கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
எனினும் போலீசார் போதிய அளவு பாதுகாப்பை அளித்திருந்தார்கள் என தமிழக அரசு சார்பில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தற்போது மத்திய புலனாய்வு குழு (சிபிஐ) விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணைக்கு தமிழக வெற்றி கழகத்தின் முன்னணி தலைவர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் ஏற்கனவே டெல்லியில் ஆஜரானார்கள்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் டெல்லியில் ஆஜராக, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு டெல்லியில் பாதுகாப்பு வழங்க, தமிழக வெற்றி கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக பதில் அளித்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வுமான வானதி சீனிவாசன், ” கரூரை விட அவருக்கு டெல்லியில் பாதுகாப்பு சிறப்பாக இருக்கும்” என்றார்.
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு இல்லை.. காங்கிரசுக்கு அமைச்சர் பெரியசாமி பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com