Udhayanidhi Stalin | தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (செப்.29, 2024) துணை முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்த நிலையில் தமிழக அமைச்சரவையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மனோ தங்கராஜ் விடுவிப்பு
அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜ், கே.எஸ் மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், எஸ்.எம் நாசர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
பொன்முடிக்கு இலாகா மாற்றம்
இந்த நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், ஆதித் திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துழந ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
MK Stalin: “எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….
M K Stalin: கிராமங்களை வளர்த்து எடுப்பதே திராவிட மாடல் அரசின் இலக்கு எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்….
Seeman: காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத் துறையின் தோல்வி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
Nainar nagendran: “மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கேள்வியெழுப்பியுள்ளார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்…
Annamalai questions DMK Govenment: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகைக்காக பள்ளிகளுக்கு ஏன் விடுமுறை அளிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்