Karur stampede case in MHC: கரூரில் கூட்ட நெரிசலில் 40 பேர் மரணமடைந்த விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் தொடரப்பட்டுள்ளது.
Karur stampede case in MHC: கரூரில் கூட்ட நெரிசலில் 40 பேர் மரணமடைந்த விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் தொடரப்பட்டுள்ளது.
Published on: September 28, 2025 at 3:52 pm
சென்னை, செப்.28, 2025: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக பேரணியில் கரூரில் சனிக்கிழமை (செப்.27, 2025) நடந்தது.
இந்தக் கூட்ட நெரிசல் குறித்து விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் அணுகியுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அவசர மனுவை சென்னை ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும், இந்த துயரச் சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்கவும் ஒப்புக்கொண்டது.
இதற்கிடையில், கூட்ட நெரிசலுக்கு தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விஜய்யின் தவறுகள் இன்னலுக்கு வழிவகுத்தன என ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அவர்கள் பேசுகையில், “நடிகர்-அரசியல்வாதியின் ஐந்து மணி நேர தாமதம், அவரது வாகனத்தின் விளக்குகளை அணைக்க முடிவு, காத்திருக்கும் கூட்டத்தைத் தவிர்ப்பது மற்றும் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் கூட்ட நெரிசல் ஆகியவை இந்த கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தன” என்கின்றனர்.
இதையும் படிங்க : ‘கண்கள் கலங்கி தவிக்கிறேன்’.. ரூ.20 லட்சம் இழப்பீடு.. த.வெ.க விஜய் அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com