TVK Anand: தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் விஷம கருத்துக்களை திணிக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
TVK Anand: தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் விஷம கருத்துக்களை திணிக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Published on: March 2, 2025 at 1:13 pm
Updated on: March 2, 2025 at 8:35 pm
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தீவிர முன்னெடுப்பை எடுத்து வருகிறார். அண்மையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் விஜய் பாரதிய ஜனதா கட்சியை பாசிசம் என்றும் திமுகவை பாயாசம் என்றும் விமர்சித்திருந்தார். நடிகர் விஜயின் எந்த பேச்சுக்கு திமுக மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதில் சில கருத்துக்கள் வதந்திகளுக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளன. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தக் கருத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் வெளியிடும் கருத்துக்கள் மட்டுமே தமிழக வெற்றி கழகத்தில் நிலைப்பாடு ஆகும். ஊடக விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் சிலர் விஷம கருத்துக்களை தெரிவிக்க முயற்சிக்கிறார்கள்.
இதுபோன்று விஷம கருத்துக்களை திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் கட்சியால் அங்கீகரிக்கப்படாத நபர்களின் கருத்துக்களை நம்பவோ ஏற்கவோ வேண்டாம் எனவும் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க திமுக கூட்டணியை மு.க ஸ்டாலின் சிதற விடமாட்டார்; அமைச்சர் சேகர்பாபு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com