TVK Adhav Arjuna: தி.மு.க.வினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என புகார் அளித்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா.
TVK Adhav Arjuna: தி.மு.க.வினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என புகார் அளித்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா.
Published on: July 16, 2025 at 10:17 am
சென்னை, ஜூலை 16 2025: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா தியாகராய நகர் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், “தி.மு.க.வினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் புகாரில் தி.மு.க. கொடி கட்டிய காரில் தன்னை பின்தொடர்வதாகவும், அலுவலகத்தை நோட்டமிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “தி.மு.க.வினரால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே எனக்கும் எனது அலுவலகம் மற்றும் இல்லத்துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தி.மு.க. கொடி கட்டிய காரில் பின்தொடரும் நபர்கள் தொடர்பான சி.சி.டி.வி காட்சியையும் ஆதவ் அர்ஜூனா ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
த.வெ.க முக்கிய நிர்வாகி
ஆதவ் அர்ஜூனா த.வெ.க.வின் முக்கிய நிர்வாகியாக உள்ளது. நடிகர் விஜய் தொடர்பான அனைத்து போராட்டங்கள் மற்றும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.
இந்த நிலையில் அவர் புகார் அளித்துள்ளது த.வெ.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.வும் களம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆசிரியர்கள் கைது.. தி.மு.க. அரசின் அடக்குமுறை.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com