TTV Dhinakaran: சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டது ஏன்? அண்ணாமலை எனக்கு.. என பரபரப்பாக பேசியுள்ளார் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்.
TTV Dhinakaran: சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டது ஏன்? அண்ணாமலை எனக்கு.. என பரபரப்பாக பேசியுள்ளார் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்.
Published on: September 18, 2025 at 10:26 pm
Updated on: September 18, 2025 at 10:56 pm
சென்னை, செப்.18, 2025: அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியோடு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய டி.டி.வி, “அண்ணாமலை எனக்கு நல்ல நண்பர். அவருடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. அவர் உண்மையை பேசக் கூடிய நபர். நாங்கள் இருவரும் செப்.9ஆம் தேதி டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால் குடியரசுத் தேர்தல் காரணமாக எங்களால் செல்ல முடியவில்லை. அண்ணாமலை என்னிடம் அரசியல்வாதிபோல் பழகியது இல்லை” என்றார்.
டிசம்பரில் மகிழ்ச்சி செய்தி
தொடர்ந்து, டிசம்பரில் மகிழ்ச்சியாக செய்தி வரும் என்றும் அவர் கூறினார். மேலும், எனக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே எந்தப் பகையும் இல்லை.
பாரதிய ஜனதா கட்சியின் பாதுகாப்பில்தான் எடப்பாடி பழனிசாமி இருந்தார். நான் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட 10 ஆண்டுகளில் யாருடனும் தொடர்பில் இல்லை” என்றார்.
ஆர்.கே நகரில் போட்டி ஏன்?
“ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என நான் நினைக்கவில்லை. சசிகலாதான் என்னை போட்டியிட சொன்னார். சசிகலா சொன்னதால்தான் சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டேன்” என்றார்.
இதையும் படிங்க தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்கவில்லை.. காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com