பொன்னாடைகள் தவிர்த்திடுவோம்.. கழகத்துக்கு நிதி வழங்கிடுவோம்.. டி.டி.வி தினகரன்

TTV Dhinakaran requests volunteers: “தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி கழகத்தின் வளர்ச்சிக்கு உதவிடுவோம்” என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

Published on: February 14, 2025 at 12:04 pm

கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள் என்ற தலைப்பில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், பொன்னாடைகள், பூங்கொத்துகள், பரிசுப்பொருட்கள் வழங்குவதை அறவே தவிர்த்திடுவோம்; தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி கழகத்தின் வளர்ச்சிக்கு உதவிடுவோம்.

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்திடவும், மக்கள் நலக் கொள்கைகளை நிலைநாட்டிடவும் அயராது போராடிவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகளுக்கும் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களுக்கும் கண்டிப்புடன் கூடிய ஓர் வேண்டுகோள்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கழகத்தின் தொண்டர்களும், நிர்வாகிகளும் என் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு ஆயிரம் யானைகளின் பலத்தை தருகிறது.

இயக்கத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் அனைவரும் இடைவிடாமல் ஆற்றும் பணிகள் என்னை மேலும் மேலும் ஊக்குவித்து உற்சாகப்படுத்துகிறது.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் மரியாதையும், நான் உங்கள் மீது வைத்திருக்கும் பேரன்பையும் எந்த வகையிலும் பிரிக்க முடியாத சூழலில், பலமுறை வேண்டுகோள் விடுத்தும் நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் பொன்னாடைகள் அணிவிப்பது, பூங்கொத்து மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்குவது போன்ற சம்பிரதாயங்கள் தொடர்வது நம் இருவருக்கும் இடையிலான உரையாடல்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு தேவையற்ற காலவிரயத்தையும் அசௌகரியத்தையும் உருவாக்குகிறது.

நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கழக உடன்பிறப்புகளில் முகத்தில் தோன்றும் மலர்ச்சியும், ஆழ்மனதில் ஏற்படும் மகிழ்ச்சியுமே கடவுள் எனக்கு அளித்த வரமாக எண்ணி மகிழும் நிலையில், கட்சியின் வளர்ச்சிக்கு எந்தவகையிலும் பயனளிக்காத பொன்னாடைகள், பூங்கொத்துகள் மற்றும் நினைவுப் பரிசுகள் போன்ற சம்பிரதாயங்களை அறவே கூடாது என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அதே நேரத்தில், தங்களால் இயன்ற நிதியுதவியை கழகத்தின் வளர்ச்சிக்கு வழங்கி உதவிட முன்வருவோர் தாராளமாக வழங்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். என்மீது கொண்ட அன்பினால் நீங்கள் அளிக்கும் நிதி, கட்சியின் வளர்ச்சிக்கு ஏதேனும் ஒருவகையில் நிச்சயம் உதவும் என்ற உத்தரவாதத்தை உங்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் அளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர்; அரசியல் மாற்றம் ஏற்படுமா? திமுக அமைச்சர் பதில்!

திருச்சி ரயில் பயணிகளுக்கு தித்திப்பான செய்தி.. தாம்பரத்திற்கு ஸ்பெஷல் ட்ரெயின்.. தென்னக ரயில்வே!
Trichy to Tambaram special trains

திருச்சி ரயில் பயணிகளுக்கு தித்திப்பான செய்தி.. தாம்பரத்திற்கு ஸ்பெஷல் ட்ரெயின்.. தென்னக ரயில்வே!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com