TN Deputy CM Udhayanidhi stalin: விரைவில் விடுபட்ட மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்கும் என துணை முதல்வர் உதயநிதி வாக்குறுதி அளித்துள்ளார்.
TN Deputy CM Udhayanidhi stalin: விரைவில் விடுபட்ட மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்கும் என துணை முதல்வர் உதயநிதி வாக்குறுதி அளித்துள்ளார்.
Published on: September 16, 2025 at 1:36 pm
சென்னை, செப்.16, 2025: சென்னையில் அறநிலையத் துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு செப்.14ல் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தை நடத்தி வைத்து பேசிய உதயநிதி, “விடுபட்ட மகளிர் அனைவருக்கும் விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும்” என வாக்குறுதி அளித்தார். மேலும், “மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மகளிர்க்கு அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன” என்றார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்பது தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக ரூ.1,000 இந்திய ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் வழங்கும் தமிழக அரசின் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தில் சுமார் 1 கோடியே 16 லட்சம் பயனாளிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் மேலும் புதிய பயனாளிகள் விரைவில் சேர்க்கப்பட இருகின்றனர் எனத் தகவல்கள் கூறுகின்றன. இதை வலுப்படுத்தும் நோக்கில் உதயநிதி இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வக்ஃப் திருத்த சட்ட முக்கிய விதிகளுக்கு தடை.. மு.க. ஸ்டாலின், விஜய் வரவேற்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com