O Panneerselvam is part of NDA: அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா இடையேயான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒ.பன்னீர் செல்வம் இருக்கிறார் என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
O Panneerselvam is part of NDA: அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா இடையேயான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒ.பன்னீர் செல்வம் இருக்கிறார் என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
Published on: May 16, 2025 at 10:59 pm
Updated on: May 16, 2025 at 11:01 pm
மதுரை, மே 16 2025: தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார் என உறுதியாக தெரிவித்துள்ளார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர் ஆவார்.
முன்னதாக ஓ. பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில், நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறேன். உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்த போது எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றார்.
மேலும் இது தமக்கு வருத்தத்தை கொடுத்தது என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம் இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதிமுக, பாஜக இடையே கூட்டணி உடன்பாடுகள் எட்டப்பட்டன. முன்னதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கு. அண்ணாமலை மாற்றப்பட்டார்.
அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஓ. பன்னீர் செல்வம் தாம் இன்னமும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறேன் எனக் கூறினார்.
முன்னதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரகளாக ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியுடம் செயல்பட்டனர். இந்நிலையில் இருவருக்குள் பிளவு ஏற்பட்ட நிலையில், ஓ. பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடிப்பு; இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com