மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கிய திமுக.. ஒப்பந்தம் கையெழுத்து!

M. H. Jawahirullah: மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கி திமுக வழங்கி உள்ளது.

Published on: February 28, 2026 at 9:26 pm

Updated on: February 28, 2026 at 9:27 pm

சென்னை பிப்ரவரி 28 2026; 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது; இந்த தேர்தலை ஜவாஹிருல்லா கட்சியான மனிதநேய மக்கள் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இக்கட்சி சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆறு தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

பிப்ரவரி 22ஆம் தேதி நடந்த முதல் கட்ட பேச்சு வார்த்தையின் போது முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஐந்து முதல் ஆறு தொகுதிகள் வரை கேட்டதால் இது தொடர்பாக திமுக தலைவர் மு க ஸ்டாலினிடம் பேசி முடிவெடுப்பதாக டி ஆர் பாலு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா எம்எல்ஏ மனிதநேய மக்கள் கட்சி திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவித்திருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

மனிதநேய மக்கள் கட்சியை போன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் திமுக தரப்பில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி இந்த இரு இஸ்லாமிய கட்சிகளுக்கும் சேர்த்து நான்கு தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுக அரசின் அலட்சியம்..மீண்டும் ஒரு பேரழிவு ஏற்படக்கூடாது!… மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com