Local holiday in Kanyakumari: கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி, அய்யா வைகுண்ட சாமிகள் அவதார தினம் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Local holiday in Kanyakumari: கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி, அய்யா வைகுண்ட சாமிகள் அவதார தினம் மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: February 22, 2025 at 1:11 am
உலகின் முக்கிய பகுதியாக விளங்கும் கன்னியாகுமரி, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிற்கும் தென் எல்லையாக அமைந்துள்ளது. இங்கு பல ஆன்மீக சிந்தனையாளர்கள் பிறந்துள்ளனர். மேலும், இங்கு பழங்கால வரலாற்று சிறப்புமிக்க பாடல் பெற்ற தலங்களும் அமைந்துள்ளன. அந்த வகையில் பல்வேறு சிவாலயங்களும் இங்குள்ளன. இந்த சிவாலயங்களில் சிவாலய ஓட்டம் பிரசித்தி பெற்றது. இந்த சிவாலய ஓட்டம் மகா சிவராத்திரி தினத்தில் நடக்கும். இந்த மகா சிவராத்திரி நடப்பாண்டு (2025) பிப். 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த மகா சிவராத்திரி தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கன்னியாகுமரியில் அருகருகே அமைந்துள்ள 12 சிவாலயங்களில் சிவராத்திரி கொண்டாட்டமாக கோவிந்தா… கோபாலா…என்று பக்தர்கள் முழங்கியவாறு சிவாலய ஓட்டம் நடைபெறும்.
வித்தியாசமான முறையில் நடைபெறும் இந்த வழிபாடானது 18 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்தே வழக்கத்தில் உள்ளது. ஓலைச்சுவடிகளில் இந்த வழிபாட்டு முறையானது குறிப்பிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் நடைபெறும் இந்த பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரி வழிபாடை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை பிப்.26, 2025 அறிவிக்கப்பட்டுள்ளது.
அய்யா வைகுண்டர் அவதார நாள்
கலியழிக்க தட்சினா பூமியில் மாசி மாதம் 20ஆம் தேதி அய்யா வைகுண்டர் பிறந்தார். இதை முன்னிட்டு மார்ச் 4 ஆம் தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி சாமிதோப்பில் அமைந்துள்ளது. இதனை முன்னிட்டு அய்யா தலைமைப்பதியான சாமிதோப்பில் திருவிழா நடைபெற்று வருகிறது. உச்ச திருவிழா அவதார தினமான மார்ச் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். குளச்சலுக்குத் தெற்கில் உள்ள மண்டைக்காடு என்னும் இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம்.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இக்கோவிலில் மாசி மாதத்தின் கடைசி செவ்வாய் கிழமைக்கு 10 நாள்களுக்கு முன்பு திருவிழா தொடங்கும். இந்த ஆண்டு (2025) மார்ச் மாதம் 2ஆம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா தொடங்குகிறது. இந்தத் திருவிழாவின் பத்தாவது நாளான மார்ச் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க தேசிய கல்விக் கொள்கை.. அரசியல் பார்வை கூடாது.. மு.க ஸ்டாலினுக்கு பிரதான் கடிதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com