Thol Thirumavalavan | “திமுக, விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை” என தொல். திருமாவளவன் எம்.பி. கூறினார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Thol Thirumavalavan | “திமுக, விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை” என தொல். திருமாவளவன் எம்.பி. கூறினார்.
Published on: September 25, 2024 at 12:10 pm
Thol Thirumavalavan | விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது விலக்கு மாநாடு நடத்த ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என வி.சி.க அழைப்பு விடுத்தது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில் வி.சி.க.வின் இந்த அழைப்பு கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மதுரையில் திருமாவளவன் தனது கட்சி கொடியை ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை எனப் புகார்கள் எழுந்தன. இதற்கிடையில் வி.சி.க பிரமுகர் ஆதவ் அர்ஜூன் என்பவர், “உதயநிதி 4 ஆண்டுகள் சினிமாவில் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்தார். ஆனால் தொல். திருமாவளவன் 40 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்டவர்.
அவர் துணை முதலமைச்சர் ஆகக் கூடாதா? அரசியலில் அதிகாரப் பகிர்வு முக்கியம். இதைத் தான் நாங்கள் கேட்கிறோம்” என்றார். இந்தக் கருத்துக்கு வி.சி.க.வில் உள்ள வன்னியரசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தி.மு.க, வி.சி.க கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய வி.சி.க தலைவர் தொல்.
திருமாவளவன், “ஆதவ் அர்ஜூன் கருத்தால் தி.மு.க., வி.சி.க கூட்டணியில் விரிசல் இல்லை. ஆதவ் அர்ஜூன் பேச்சு தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்” என்றார். மேலும், திமுக, விசிக கூட்டணியில் விரிசல் இல்லை. விரிசல் உருவாகவும் வாய்ப்பு இல்லை. கூட்டணியில் தற்போது எந்த சலசலப்பும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க : அண்ணாமலை பல்கலையில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா? மருத்துவர் ராமதாஸ் கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com