Assembly Election 2026: மருத்துவர் ராமதாஸ் சசிகலா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எத்தனை கூட்டணிகள் தமிழ்நாட்டில் வந்தாலும் திமுக வெற்றி பெறும் என்றார்.
Assembly Election 2026: மருத்துவர் ராமதாஸ் சசிகலா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எத்தனை கூட்டணிகள் தமிழ்நாட்டில் வந்தாலும் திமுக வெற்றி பெறும் என்றார்.

Published on: March 21, 2026 at 12:49 pm
சென்னை மார்ச் 21, 2026; தமிழ்நாட்டில் எத்தனை கூட்டணிகள் வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணி வலிமையாக உள்ளது எனக் கூறிய திருமாவளவன், அந்த கூட்டணியை வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தொல் திருமாவளவன், ” எடப்பாடி பழனிச்சாமி குறித்து கவலை தெரிவித்ததுடன் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக, கிள்ளு கீரையாக பயன்படுத்துகிறது எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும் தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சசிகலா கூட்டணிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க; மாவோயிஸ்ட் ரூபேஷு-ன் ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு.. ஜாமீன் வழங்கிய மதுரை ஐகோர்ட்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது; ஏப்ரல் 23ஆம் தேதி பதிவான வாக்குகள் மே மாதம் நான்காம் தேதி எண்ணிக்கை செய்யப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்பட உள்ளன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இதுவரை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை; அந்தக் கூட்டணியில் தொல் திருமாவளவன் 10 தொகுதிகள் வரை கேட்பதாகவும், திமுக தலைப்பில் ஆறு முதல் எட்டு தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
திமுகவை பொருத்தமட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து தொகுதிகளும், மதிமுகவுக்கு நான்கு தொகுதிகளும் (இதில் மூன்று தொகுதிகளில் திமுக சின்னத்தில் போட்டி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது; இந்த நிலையில் தற்போது ஒரு தொகுதி குறைக்கப்பட்டு ஐந்து தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; பாஜகவை தோற்கடிப்பதா? கட்சியை வளர்ப்பதா? எது முக்கியம்? இந்திய கம்யூனிஸ்ட் பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com