முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
Published on: September 2, 2024 at 11:54 pm
Mullaperiyar dam Issue | கேரளாவில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே ஆங்கிலேயே பொறியாளர் பென்னி குயிக்கால் கட்டப்பட்ட அணையை தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. நூற்றாண்டை கடந்த, பழமையான இந்த அணையால் கேரளத்துக்கு ஆபத்து இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இதனால் அணையின் முழு கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்க எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் நிபுணர் குழு அந்த அணையை ஆய்வு செய்து அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் 142 அடி வரை நீரை தேக்கி வைக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
கேரளா- தமிழ்நாடு வாதம்
ஆனால் அதன்பிறகும் கேரள அரசு சமாதானம் அடையவில்லை. பழைய அணையின் கீழ்பகுதியில் புதிய அணை கட்ட முயற்சி செய்தது. தொடர்ந்து முயன்று வருகிறது.
இந்த நிலையில் அணையின் உறுதித்தன்மை விவகாரம் தொடர்பாக விவாதிக்க டெல்லியில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகளும் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க : ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிடம் இருந்து சம்பளம்: செபி தலைவர் மீது காங்கிரஸ் புதிய புகார்
தமிழக அதிகாரிகள், “2021-ம் ஆண்டின் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என வாதிட்டு உள்ளனர்.
ஆனால் கேரள அதிகாரிகள் அங்கு சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு விஷயங்களையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் எடுத்துக்கூறி ஆய்வு நடத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
முல்லை பெரியாறு அணை- 12 மாதத்துக்குள் ஆய்வு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீர்வள ஆணையம், அணையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்வது அவசியம் எனக்கூறி, 12 மாதங்களுக்குள் விரிவாக ஆய்வை நடத்தி முடித்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளனர்.
நீர்வள ஆணையத்தின் ஒப்புதல் குறித்து கேரள நீர்வளத்துறை மந்திரி ரோஷினி அகஸ்டின் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், “தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் எப்போதும் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் அணையின் பாதுகாப்பில் உத்தரவாதம் தேவை” என்றார். இதற்கிடையில் முல்லை பெரியாறு அணையில் 12 மாதத்துக்குள் ஆய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com