Tamilisai | 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தது. இந்த நிலையில் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பெற்றார். சில மாதங்கள் கழித்து சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏயும், அவரது மகனுமான உதயநிதிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கழிந்து விட்டது. நேற்று அக்கட்சியின் பவள விழா நடந்தது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்து ஜாமினில் வந்துள்ள செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார். அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜ், கே.எஸ் மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து பேசிய பா.ஜ.க மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தி.மு.க. முடியாட்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர் என்றால் இங்கு ஜனநாயகம் எங்கே இருக்கிறது?
இதை சரியான ஜனநாயக அணுகுமுறை என்று சொல்ல முடியாது. இது ஒரு தவறான முன்னுதாரணம்” என்றார்.
மா. சுப்பிரமணியன் பதிலடி
பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் உதயநிதி நியமனம் குறித்து கேள்வி கேட்கலாம். விமர்சிப்பவர்கள் வாரிசு அரசியலில் இருக்கிறார்களா என பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
செல்லாக்காசு பா.ஜ.க: அமைச்சர் சேகர் பாபு
இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, “அடுத்த கால் நூற்றாண்டு காலம் தி.மு.க.வையும், மக்கள் நலனையும் தோளில் சுமக்கவுள்ளார் உதயநிதி. மக்களிடம் செல்லாக்காசாகிவிட்ட பா.ஜனதாவின் கூற்றுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. தகுதி இல்லாத கட்சி என்பதாலே மக்கள் பா.ஜ.க.வுக்கு தோல்வியை பரிசளித்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க
Dindigul: தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ ஒருவர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
Udhayanidhi stalin : 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் இடையேதான் போட்டி என விஜய்…
TN Deputy CM Udhayanidhi stalin: விரைவில் விடுபட்ட மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்கும் என துணை முதல்வர் உதயநிதி வாக்குறுதி அளித்துள்ளார்….
Edappadi Palaniswami: உதயநிதியை துணை முதலமைச்சராக ஆக்கியதுதான் தி.மு.க.வின் சாதனை எனத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Udhayanidhi Shirt Issue | உதயநிதி ஆடை விவகாரம் குறித்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்