Finance Minister Thangam Thenarasu: இந்தியாவின் கடன் உயர்ந்துள்ளது; பாஜக அடித்த கமிஷன் எவ்வளவு என கேள்வி எழுப்பி உள்ளார் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
Finance Minister Thangam Thenarasu: இந்தியாவின் கடன் உயர்ந்துள்ளது; பாஜக அடித்த கமிஷன் எவ்வளவு என கேள்வி எழுப்பி உள்ளார் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on: March 3, 2025 at 4:47 pm
Updated on: March 3, 2025 at 4:51 pm
சென்னை, மார்ச் 3, 2025: பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கு அண்ணாமலை, திமுக அரசை குற்றம் சாட்டி பேசி இருந்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் ஊழல் மலிந்து காணப்படுவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கு தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், “தமிழ்நாட்டின் மீது அண்ணாமலைக்கு உண்மையாக அக்கறை இருந்தால் நிலுவையில் இருக்கும் கல்வி மற்றும் 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியைப் பெற்றுத் தர வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து தென்னரசு, ” 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் கடன் சுமை 55.87 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது இந்தியாவின் கடன் சுமை 181.74 லட்சம் கோடியாக மாறி இருக்கிறது.
இந்த விஷயத்தில் நீங்கள் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? என்றார்.
மு.க ஸ்டாலின் தலைமையில் பொருளாதார வளர்ச்சி
இதையடுத்து தங்கம் தென்னரசு, ” தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை பாராட்டியுள்ளது.
இந்த நிலையில் அவதூறுகளை மட்டுமே பரப்புவது உங்களின் அரசியல் முதிர்ச்சிக்கான போதமையை காட்டுகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க தங்கம் விலையில் நிம்மதி.. ரூ.1 உயர்ந்த வெள்ளி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com