Tamil Nadu Budget 2025: தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழக பட்ஜெட் இன்று (மார்ச் 14 2025) தாக்கல் செய்யப்பட்டது
Tamil Nadu Budget 2025: தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழக பட்ஜெட் இன்று (மார்ச் 14 2025) தாக்கல் செய்யப்பட்டது
Published on: March 14, 2025 at 3:53 pm
சென்னை, மார்ச் 14, 2025: தமிழ்நாடு பட்ஜெட் 2025 இன்று (மார்ச் 14 2025) தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்ஜெட் தாக்கலின் போது, தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிப்பட தெரிவித்தார்.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை சட்டமன்றத்தில் 2025-26 மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, கலைஞர் கனவு இல்லம் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
மேலும், கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் மற்றும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ போன்ற பெண்களுக்கான மாநிலத்தின் முதன்மையான நலத்திட்டங்களுக்கும் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.
தமிழகம் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த மறுத்ததால், மத்திய அரசு ₹2,152 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக தென்னரசு குற்றஞ்சாட்டினார்.
இருப்பினும், நிதிச் சுமையை சுமந்தாலும், மாநிலம் தனது இருமொழிக் கொள்கையை தொடர்ந்து நிலைநிறுத்தும் என்று நிதியமைச்சர் கூறினார். தொடர்ந்து, ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் பிற கல்விச் செலவுகளுக்கு தடையின்றி நிதியளிப்பதை உறுதி செய்வதற்கான செலவுகளை அரசாங்கம் ஈடுசெய்யும் என்று அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க : Anbucholai centres: தமிழ்நாட்டில் 25 அன்பு சோலை மையங்கள்: தங்கம் தென்னரசு அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com