19 ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அவதரித்தவர் சுவாமி அய்யா வைகுண்டர். இவரின் 193 வது அவதார தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கு அண்ணாமலை வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ” ஒடுக்கப்படும் மக்களை காப்பதும் எளியவர்களுக்கு உதவிகள் செய்வதுமே தர்மம் என்ற அன்பு நெறிகளை போதித்து, சாதி மதம் கடந்து அனைவருக்கும் பொதுவானவராக இருப்பவர் ஐயாவைகுண்டர்.
அவரின் 193 வது அவதார தினத்தை கொண்டாடும் அனைத்து பக்தர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடவுள் ஒவ்வொரு வரிடமும் இருக்கிறார் என்ற ஞானத்தை போதித்தவர் அய்யா வைகுண்டர். சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி ஆண் பெண் அனைவரும் சமம் என சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர் அய்யா வைகுண்டர்.
மக்கள் மத்தியில் உடல் மற்றும் உள்ள தூய்மையை வலியுறுத்தி சமத்துவம் சமூக நீதி சுயமரியாதை அச்சமின்மை தர்மம் போன்ற அற நெறிகளை வளர்த்தவர் அய்யா வைகுண்டர்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சமகால அரசியல் குறித்து பேசி உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “அதிகாரத்துவம் சமூக ஏற்றத்தாழ்வு கொலை கொள்ளை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து காணப்படும் இன்றைய காலத்தில் அய்யா வைகுண்டரின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வது முக்கியமானதாக இருக்கிறது” என கூறியுள்ளார்.
அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம்
தொடர்ந்து அண்ணாமலை, ஐயா வைகுண்டரின் அவதார தினமான இன்று அவரின் கருத்துக்களை பின்பற்றி அவர் காண விரும்பிய ஏற்றத்தாழ்வுகள் அற்ற அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் என்றும் இதற்கான உறுதி மொழியை ஏற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க தொகுதி மறுசீரமைப்பு புரளி.. எதற்காக அனைத்துக்கட்சி கூட்டம்.. அண்ணாமலை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்