Seeman vs Vijayalakshmi case in SC Order: “இரு (சீமான் மற்றும் விஜயலட்சுமி) தரப்பும் அனைத்து புகார்களையும் திரும்ப பெற்றதையும் மன்னிப்பு கேட்டதையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Seeman vs Vijayalakshmi case in SC Order: “இரு (சீமான் மற்றும் விஜயலட்சுமி) தரப்பும் அனைத்து புகார்களையும் திரும்ப பெற்றதையும் மன்னிப்பு கேட்டதையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Published on: September 24, 2025 at 7:22 pm
புதுடெல்லி, செப்.24, 2025: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்.24, 2025) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இருதரப்பும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு பேட்டியோ அல்லது காணொளியோ வெளியிடக்கூடாது; மன்னிப்பு கேட்காவிட்டால் மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, இரு தரப்பும் அனைத்து புகார்களையும் திரும்ப பெற்றதையும் மன்னிப்பு கேட்டதையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
நடிகை தரப்பு வாதம்
இந்த வழக்கில், நடிகை தரப்பு, “சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை திரும்பப் பெறுகிறோம்; ஆனால் மன்னிப்பு கோர முடியாது” என்றனர்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “ஒரு இடத்தில் நீங்கள் மன்னிப்பை எதிர்பார்க்கும் பொழுது நீங்களும் அதற்கேற்றவாறு மன்னிப்பை கேட்கத்தான் வேண்டும்.
நீங்கள் மன்னிப்பு கேட்க முடியாது என்றால் அவரிடமும் இருந்து நீங்கள் மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க : மகளிர் உதவித் தொகைக்கு அப்ளே செய்துள்ளீர்களா? விண்ணப்ப நிலையை அறிவது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com