16 வயது சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாடகர் மனோவின் இரு மகன்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
February 6, 2025
16 வயது சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாடகர் மனோவின் இரு மகன்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: September 11, 2024 at 10:09 pm
Singer Manos two sons case | சென்னை ஆலப்பாக்கம் மற்றும் மதுரவாயலை சேர்ந்த 16 வயதான இரு சிறுவர்களை, வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் வைத்து பாடகர் மனோவின் 2 மகன்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த இரு சிறுவர்களும் கால்பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகினறனர். இவர்கள் சம்பவத்தன்று தங்களின் பயிற்சியை முடித்துவிட்டு உணவு வாங்க கடைக்கு சென்ற போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
மனோவின் மகன்கள் ரஃபிக், சாஹீர் மற்றும் அவரது 3 நண்பர்களும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் அங்கிருந்து தப்பித்துப்போய் ரோந்து பணியில் இருந்த போலீசை அழைத்து வந்துள்ளார். எனினும் போலீசார் கண்முன்ணே தாக்குதல் நடந்துள்ளது. மேலும், ஆபாச வார்த்தைகளாலும் திட்டியுள்ளனர்.
இதையும் படிங்க : திருநெல்வேலி: பழ வியாபாரி போக்சோவில் கைது
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நண்பர்கள் கூறுகையில், “இருவரும் உணவு வாங்க சென்றபோது மனோவின் மகன்கள் ஆபாசமாக அழைத்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் எதிர்ப்பு தெரவிக்கவே, முட்டிப் போட வைத்து மட்டையால் தாக்கினர்” என்றனர்.
இந்தத் தாக்குதலில் சிறுவன் கிருபாகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் மனோவின் மகன்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். மனோவின் இரு மகன்கள் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com