Sengottaiyan: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற உள்ளது; இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திங்கள் கிழமை (டிசம்பர் 15 2025) செய்தியாளர்களை சந்தித்தார்.
Sengottaiyan: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற உள்ளது; இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திங்கள் கிழமை (டிசம்பர் 15 2025) செய்தியாளர்களை சந்தித்தார்.

Published on: December 16, 2025 at 10:26 am
சென்னை டிசம்பர் 16 2025: விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி காலை 11 மணி முதல் ஒரு மணிக்குள் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் திங்கள் கிழமை மாலை ( டிசம்பர் 15 2025) செய்தியாளர்களை சந்தித்தார்.
இவர்கள் வர வேண்டாம்
அப்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
நடிகர் விஜயின் கரூர் பொதுக் கூட்டத்தில் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும் நிர்வாகிகுமான செங்கோட்டையன் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொள்ள பாஸ் உண்டா?
இந்த நிலையில் செங்கோட்டையனிடம் கூட்டத்தில் கலந்து கொள்ள பாஸ் உள்ளிட்ட ஏதேனும் விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், ” கூட்டத்தில் கலந்து கொள்ள பாஸ் உள்ளிட்ட எந்த விதிமுறைகளும் விதிக்கப்படவில்லை; பொதுக் கூட்டத்திற்கு வரும் நபர்கள் மகிழ்ச்சியுடன் வந்து பாதுகாப்பாக திரும்ப வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி செல்லுமா? செல்வப் பெருந்தகை பதில் இதுதான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com