என் தங்கை எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும்.. காளியம்மாளை வாழ்த்திய சீமான்!

Seeman: “என் தங்கை எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும்” என அதிமுகவில் இணைந்த காளியம்மாளை மனதார வாழ்த்தி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Published on: March 15, 2026 at 2:38 pm

சென்னை மார்ச் 15, 2026; சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகி காளியம்மாளை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்தி உள்ளார்.
இது குறித்துச் செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சீமான், “காளியம்மாள் நம்ம தங்கை; நம்ம வளர்த்த பிள்ளை. தங்கச்சி எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும்; தங்கைக்கு என்னோட வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவில் இருந்து நாம் தமிழர் வந்தாரா காளியம்மாள்?

தொடர்ந்து அதிமுக கட்சியில் இருந்து தான் நாம் தமிழருக்கு வந்தாரா காளியம்மாள் என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், ” தங்கை சொல்வது போல் அதிமுகவில் இருந்து தான் நாம் தமிழர் கட்சிக்கு அவர் வந்துள்ளார்” என்றார். நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணியில் சீமானுக்கு நிகராக பார்க்கப்பட்டவர் காளியம்மாள். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் அவர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது; இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து காளியம்மாள் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த காளியம்மாள், ” தாம் அதிமுகவிலிருந்து நாம் தமிழருக்கு சென்றதாகவும் பின்னர் நாம் தமிழரிலிருந்து அதிமுகவுக்கு திரும்பியதாகவும் பதில் அளித்தார்.

இதே பதிலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க; தமிழக மக்களை காப்பதற்காக கூடுதலாக 3 தொகுதிகளை வாங்கி உள்ளோம்.. காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com