Security Tightened on TN Railway Station: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Security Tightened on TN Railway Station: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Published on: February 9, 2025 at 6:54 pm
Updated on: February 9, 2025 at 7:55 pm
ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கடந்த வியாழக் கிழமை 36 வயது கர்பிணி பெண் ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்த்து போராடி வெளியே தள்ளப்பட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த அப்பெண்ணுக்கு வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அப்பெண்ணுக்கு நேற்று (சனிக்கிழமை) கருச் சிதைவு ஏற்பட்டது. கருவில் இருந்த குழந்தையின் இதயத் துடிப்பு விகிதம் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அந்தப் பெண்ணின் நிலை இப்போது சீராக உள்ளது. மேலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தென்னக ரயில்வேயின் சென்னை பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் நேற்று (சனிக்கிழமை) அப்பெண்ணுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் ரயில்வே போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், பயணிகள் தாங்கள் ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்தால் புகாரளிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய மூத்த ரயில்வே போலீஸ் அதிகாரி,“தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கான ரயில் பெட்டிகளில் ஆண் பயணிகள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய ஒவ்வொரு ரயிலையும் நாங்கள் சோதனை செய்யத் தொடங்கியுள்ளோம்.” என்றார்.
மேலும், அதிக ஆபத்துள்ள பாதைகளில் பெண்கள் பொது பெட்டிகளில் அரசு ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களை ஈடுபடுத்துவது உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர்.. 31 நக்சல்கள் சுட்டுக்கொலை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com