சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர்.. 31 நக்சல்கள் சுட்டுக்கொலை!

Encounter in Chhattisgarhs Bijapur: சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.

Published on: February 9, 2025 at 12:51 pm

Updated on: February 9, 2025 at 5:25 pm

சத்தீஸ்கரில் என்கவுன்ட்டர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9, 2025) நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் இருவர் உயிரிழந்தனர். நக்சல், பாதுகாப்பு படையினர் இடையே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 31 நக்சலைட்டுகள் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பூங்கா காடுகளில் மாவோயிஸ்டுகள் இருப்பதாக ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதற்கு, பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதனை சத்தீஸ்கர் மாநில பாஸ்தர் ரேஞ்ச் காவல் ஆய்வாளர் பி. சுந்தர்ராஜ் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “இந்த நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்” என்றார்.
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் இறந்த வீரர்களில் ஒருவர் சிறப்புப் பணிப் படையைச் சேர்ந்தவர் ஆவார். மற்றொருவர் மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லி முதலமைச்சர் அதிஷி ராஜினாமா.. அடுத்து யார்? அரசியல் பரபரப்பு!

நாகர்கோவில் அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல லட்சம் மோசடி? பரபரப்பு தகவல்கள்!
Sukanya Samriddhi Fraud at Nagercoil PO

நாகர்கோவில் அஞ்சலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல லட்சம் மோசடி? பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com