பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்; காஞ்சிபுரம் செல்கிறார் சசிகலா!

V K Sasikala | பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

Published on: September 12, 2024 at 1:56 pm

V K Sasikala | மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா தோழி சசிகலா விடுத்துள்ள அறிக்கையில், “தமிழர்களின் வாழ்வில் நீக்கமற கலந்திருப்பவரும், நம் இயக்கத்தின் உயிர் மூச்சாகவும், தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்கென வாழ்ந்த மாபெரும் தலைவராகவும் விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, வருகின்ற 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு சசிகலா செல்கிறார்.

அங்கு அவர், பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தமிழக மக்களின் அன்பும், ஆதரவும் எந்நாளும் தொடர பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளை மனதில் ஏற்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா ஆகியோர் காட்டிய அதே வழியில் மக்கள் தொண்டில் முழு மனதோடு பாடுபட பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை அனைவரும் சிறப்புடன் கொண்டாடிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த பெருமைக்குரிய நிகழ்வில் பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுபவர்களும், புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான அன்பு உடன்பிறப்புகளும், சசிகலா வழியில் பயணிக்கும் கழகத் தொண்டர்களும், கழக நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும், ஜாதி, மத பேதமின்றி. அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கச்சா விலை சரிவு; பெட்ரோல், டீசல் விலையை ரூ.14 குறைங்க: மருத்தவர் அன்புமணி ராமதாஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com