Sanitation workers protest | திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம் தொடர்கிறது.
Sanitation workers protest | திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம் தொடர்கிறது.
Published on: October 23, 2024 at 7:47 pm
Sanitation workers protest | திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் தினமும் 400 டன் குப்பைகள் வரை சேமிக்கப்படுகின்றன. இதனை அகற்றும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (அக்.22, 2024) மாலை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்ந்தது. துப்புரவு தொழிலாளர்கள் இரவு தரையில் படுத்து, தூங்கி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த நிலையில், தனியார் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படவில்லை. இந்த நிலையில் தூய்மைப் பணியாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்கிறது.
இதையும் படிங்க பேராசிரியர் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: டி.டி.வி தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com