Naam Thamilar Kaliammal: நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Naam Thamilar Kaliammal: நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Published on: February 22, 2025 at 2:09 pm
Updated on: February 24, 2025 at 4:31 pm
சென்னை, பிப்.22: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மனப்பாடு கடற்கரை கிராமத்தில் மார்ச் மூன்றாம் தேதி உறவுகள் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழ் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அழைப்பிதழில் காளியம்மாளின் பெயர் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. மாறாக அவர் வகிக்கும் நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகள் அந்த நிகழ்ச்சி அழைப்பிதழில் இடம் பெறவில்லை.
அதற்கு மாறாக சமூக சேவகி என்ற அடைமொழி மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட காளியம்மாள் கடந்த சில மாதங்களாக அக்கட்சியில் இருந்து ஓரம் கட்டப்படுவதாக பேச்சுக்கள் எழுந்தன.
இதை உறுதி செய்யும் விதமாக காளியம்மாள் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபடவில்லை.
இதற்கிடையில் அவர் தற்போது தான் வகித்து வரும் நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலக உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இது குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார் என்ற கருத்தும் மேலோங்கி வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த காளியம்மாள், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு கட்சியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி காளியம்மாளின் இந்த முடிவு கட்சி தொண்டர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக காளியம்மாளின் முடிவு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த சீமான், ” அவர் கட்சியில் தொடர்வதற்கும், விலகுவதற்கும் அவருக்கு முழு உரிமை உள்ளது” என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க
கன்னியாகுமரியில் மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை; எந்தெந்த தினங்கள் தெரியுமா?
பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல்; அண்ணாமலை கடும் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com