RMC Chennai | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
RMC Chennai | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: October 30, 2024 at 9:56 am
RMC Chennai | தென்தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
30.10.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
02.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.11.2024 மற்றும் 04.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
29.10.2024: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
30.10.2024: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
31.10.2024 (தீபாவளி தினம்): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க பசியில் காத்திருக்கும் பறவைகள்; மறைந்திருக்கும் 4 கிவி பழங்கள்: சரியா கண்டுபிடிச்சா நீங்க தான் கில்லி!
நாட்டின் இன்றைய முக்கிய நிகழ்வுகள், நடப்புகள் குறித்து இதில் சுருக்கமாக பார்க்கலாம். சென்னையில் (ஜுலை 13, 2025) தங்கத்தின் விலை, கிராம் ரூ. 9,155 சவரன் ரூ. 73,240. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 100.90 ஆகவும், டீசல் விலை ரூ. 92.49 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
நாட்டின் இன்றைய முக்கிய நிகழ்வுகள், நடப்புகள் குறித்து இதில் சுருக்கமாக பார்க்கலாம். சென்னையில் (ஜுலை 13, 2025) தங்கத்தின் விலை, கிராம் ரூ. 9,140 சவரன் ரூ. 73,120. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 100.93 ஆகவும், டீசல் விலை ரூ. 92.52 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை, ஜூலை 13 2025: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் ‘ப’ வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் ஆணை பிறப்பித்துள்ளது.
அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன் என்ற மலையாளத் திரைப்படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்க முயல்வதில் தவறு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “. மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத் தேவை ஆசிரியர்களும், வகுப்பறைகளும் தான். ஆனால், தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதையடுத்து, “பெரும்பான்மையான பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.7500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் எத்தனை வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்பது அரசுக்கே வெளிச்சம். புதிய வகுப்பறை கட்டிடங்களிலும் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவது வாடிக்கையாகி விட்டது” என விமர்சித்துள்ளார்.
மேலும், “மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்றால் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் குறைந்தது ஒரு லட்சம் வகுப்பறைகள் கட்டப்படுவதுடன், ஒரு லட்சம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும். அதை விடுத்து ப வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும். எனவே, தமிழக அரசு நகைச்சுவை செய்வதை விடுத்து கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறையை காட்ட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இது தமிழ்நாடா… இல்லை காடா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
சென்னை, ஜூலை 13 2025: அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்தள்ள அறிக்கையில், “சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகையால் பொதுமக்கள் பாதிப்பு – தீயணைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து மும்பைக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
சரக்கு ரயிலில் ஏற்பட்டிருக்கும் தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகை திருவள்ளூர் ரயில் நிலையத்தைச் சுற்றிய 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்திருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட ரயில் நிலையத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதோடு, கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதா? டி.டி.வி தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திருநெல்வேலி, ஜூலை 13 2025: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா பணகுடி அருகே கடம்பன்குளத்தில் அய்யா வைகுண்டர் திருத்தாங்கல் அமைந்துள்ளது. இந்தத் திருத்தாங்கல் அய்யா வைகுண்டர் கால்நாட்டிக் கொடுத்த சிறப்புமிக்கது.
இத்திருத்தலத்தில் இருந்துதான் ஒவ்வொரு திருவிழாவின்போதும், அய்யா வைகுண்டர் தலைமை பதி அமைந்துள்ள சாமிதோப்புக்கு திருக்கொடிக் கயிறும், திருக்கொடிப் பட்டமும் பாதயாத்திரையாக கொண்டு செல்லப்பட்டும்.
இவ்வாறு பல்வேறு சிறப்பு மிக்க அய்யா வைகுண்டர் திருத்தாங்கலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆனித் திருவிழா நடைபெறுகிறது. இரவு அன்னதானம் வழங்கப்படும். அதன் பின்னர், அய்யா வைகுண்டர் அனுமன் வாகனத்தில் அருள் பாலிப்பார். தொடர்ந்து, திங்கள்கிழமை (ஜூலை 14 2025) மதியம் அய்யா வைகுண்டருக்கு உச்சிப் பணிவிடை நடைபெறும்.
மேலும், சாமியாட்டம் நடைபெறும். இதைத் தொடர்ந்து, அன்றைய தினம் இரவு அய்யா பூ வாகனத்தில் ஊர் சுற்றி வந்து அன்புக் கொடி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மறுதினம் (செவ்வாய்க்கிழமை) தொட்டில் பழ அன்ன தர்மத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெறும். தொடர்ந்து, அய்யா வைகுண்டருக்கு வழக்கமான பணிவிடைகள் நடைபெறும்.
இதையும் படிங்க : வேலை இல்லை.. ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி; அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com