RMC Chennai | Rain Alert | சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டல இயக்குனர் பா. செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை இன்று (அக்.9, 2024) பெய்யவாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, “ நாளை (அக்.10,2024), தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, விருதுநகர். சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்யவாய்ப்புள்ளது” எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
10.10.2024 மற்றும் 11.10.2024
கேரள கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், மாலத்தீவு பகுதிகள், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 12.10.2024: கேரளா கடலோர பகுதிகள், மாலத்தீவு- லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை
ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க சரசரவென சரிந்த தங்கம்; இன்றைய ரேட் இதுதான்: உடனே முந்துங்க!
Coldrif owner arrested: கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிப்பு உரிமையாளர் காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார்….
Ennore Powerplant accident: எண்ணூரில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்….
World Seafood Conference in Chennai : உலக கடல் உணவு மாநாடு, 2026 பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது….
Padaiyaanda Maveera movie issue: வீரப்பன் பெயரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என கௌதமன் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது….
Chennai சென்னையில் 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்