Anbumani Ramadoss: ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Published on: May 26, 2025 at 11:24 am
சென்னை, மே 26 2025: ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகளை அகற்றும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஞாயிற்றுக்கிழமை (மே 25 2025) விடுத்திருந்த அறிக்கையில், “தமிழ்நாட்டின் தீராத பெருந்துயரங்களில் குறிப்பிடத்தக்கது இராணிப்பேட்டை குரோமியக் கழிவுகளும், அதனால் அப்பாவி பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் தான்.
இது குறித்து தமிழக அரசுக்கு தெரிந்திருந்தும், இராணிப்பேட்டை அமைச்சரின் தொகுதியாக இருந்தும் இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், “ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகள் சிக்கலுக்கு நிரந்தரமானத் தீர்வு அங்கு குவித்து வைக்கப் பட்டிருக்கும் குரோமியக் கழிவுகளை அகற்றுவதும், அதனால் மண் மற்றும் நீரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் போக்குவதும் தான்” எனக் கூறியிருந்தார்.
தொடர்ந்து, “சாதாரணமாக நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட குரோமியத்தின் அளவு லிட்டருக்கு 0.05 மில்லி கிராம் மட்டும் தான். ஆனால், இராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் லிட்டருக்கு 20 மி.கி வரையிலும், குரோமியக் கழிவுகள் நேரடியாக கலக்கும் பகுதிகளில் 55 மி.கி வரையிலும் குரோமியம் கலந்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இயல்பை விட 1100 மடங்கு அதிகமாக குரோமியம் கலந்த நீரை பயன்படுத்துவோருக்கு ஏற்பட்டு வரும், ஏற்படும் பாதிப்புகளை நினைக்கவே அச்சமாக உள்ளது” என சுட்டிக்காட்டி இருந்தார்.
மேலும், “இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல், பெயரளவிலான திட்டங்களைச் செயல்படுத்தாமல் குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மக்களையும், இயற்கையையும் காக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசின் சார்பில் அலட்சியம் காட்டப்பட்டால் அதைக் கண்டித்து மாபெரும் மக்கள் போராட்டத்தை நானே தலைமையேற்று நடத்துவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க : பயங்கரவாதம் உலகளாவிய பிரச்னை.. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கூடாது; தி.மு.க எம்.பி கனிமொழி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com