சென்னை, செப்.25, 2025: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், “71வது திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது பெற்ற தமிழ் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள்” தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், “தமிழ் கலாச்சாரத்தின் பெருமையையும், தமிழ் சினிமாவின் உயர்வையும் உலகிற்கு உணர்த்தும் வகையில், டெல்லியில் நடைபெற்ற 71வது தேசிய சினிமா விருதுகள் வழங்கும் விழாவில், ‘வாத்தி’ திரைப் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு வாழ்த்துகள்.
அதேபோல், ‘பார்க்கிங்’ படத்திற்காக சிறந்த தமிழ் திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது பெற்ற இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், மற்றும் ‘பார்க்கிங்’ படத்தில் நடித்து சிறந்த துணை நடிகர் விருது பெற்ற எம்.எஸ். பாஸ்கருக்கு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கலைமாமணி விருதுகள்
தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றம் மூலம் 2021, 2022, மற்றும் 2023 ஆண்டுகளுக்காக வழங்கப்பட்ட கலைமாமாணி விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் தேமுதிக சார்பாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, “இவர்களின் கலைப் பங்களிப்பு தமிழ் கலாச்சாரத்தின் புகழை உலக அரங்கில் பறைசாற்றுவதாக அமையட்டும்” எனவும் வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : சீமான் vs விஜயலட்சுமி.. மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்