Political commentator Ponraj: தமிழக பெண்கள் குறித்து இழிவாக பேசிய நிலையில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மன்னிப்பு கூறியுள்ளார்.
Political commentator Ponraj: தமிழக பெண்கள் குறித்து இழிவாக பேசிய நிலையில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மன்னிப்பு கூறியுள்ளார்.

Published on: March 27, 2026 at 2:52 pm
சென்னை மார்ச் 27,2026; அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தமிழக பெண்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக மகளிர் நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசியதாக புகார்கள் எழுந்தன; மேலும் பொன்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இதற்கிடையில் அரசியல் தலைவர்கள், மகளிர் மற்றும் மகளிர் அரசியல் தலைவர்கள் குறித்து இழிவாக பேசும் பொன்ராஜ் போன்ற நபர்களை கைது செய்வதில் ஏன் இத்தனை தாமதம்? பொன்ராஜ் போன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இரந்தார்கள்.
ட்விட்டரில் பொன்ராஜ் மன்னிப்பு
இந்த நிலையில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கோரி உள்ளார்; இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், காயம் பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் எந்த பெண்ணையும் நான் அவதூறாக சொல்லவில்லை அப்படி சொல்லவும் மாட்டேன் எனவே தொடர்ந்து அலைபேசி மிரட்டல்கள் எனக்கு வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்”என தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழக பெண்கள் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இதையும் படிங்க; சென்னையை குறி வைக்கும் தமிழக வெற்றி கழகம்.. திமுகவுக்கு போட்டி ஆகுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com