மீனவர்கள் மீது அடக்குமுறை; அக்.8 இலங்கை தூதரகம் முற்றுகை: பா.ம.க அறிவிப்பு

PMK Sri Lanka embassy blockade protest | மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து பாமக சார்பில் 8-ஆம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

Published on: October 3, 2024 at 10:57 am

Updated on: October 3, 2024 at 10:59 am

PMK Sri Lanka embassy blockade protest | பாமக சார்பில் 8-ஆம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது என அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் போதிலும் அதை சிங்கள அரசு மதிக்க மறுப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “சிங்களக் கடற்படையினரின் அண்மைக்கால கொடிய அத்துமீறல்களுக்கு எடுத்துக்காட்டு தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் தான். வங்கக்கடலில் இரு படகுகளில் சென்று ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த தருவைக்குளம் மீனவர்கள் 22 பேர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கடல் நீரோட்டத்தின் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கைக் கடற்படை இரு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் விடுதலை செய்யவில்லை. அதுமட்டுமின்றி, அனைத்து மீனவர்களுக்கும் இலங்கை ரூபாய் மதிப்பில் தலா ரூ.3.5கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், அதை செலுத்தாத வரை விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டது.

அபராதத்தை செலுத்த முடியாத மீனவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர்” எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து, “முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இணைப் பொதுச் செயலாளருமான ஏ.கே.மூர்த்தி – பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

இது தமிழ்நாடா… இல்லை காடா? அன்புமணி ராமதாஸ் கேள்வி Anbumani Ramadoss

இது தமிழ்நாடா… இல்லை காடா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

Anbumani Ramadoss: இது தமிழ்நாடா… இல்லை காடா? செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்” என…

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் எப்போது? மு.க ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி.! Anbumani Ramadoss

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் எப்போது? மு.க ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி.!

Anbumani Ramadoss: “2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது; டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமையுங்கள்” என தமிழக முதலமைச்சர்…

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்! Anbumani Ramadoss

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!

Anbumani Ramadosss: “திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள் என்ற தலைப்பில் பா.ம.க தலைவர்…

மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம்.. மராட்டியத்தில் மின் கட்டணம் குறைப்பு.. தமிழ்நாட்டில் அதிகரிப்பு ஏன்? அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss

மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம்.. மராட்டியத்தில் மின் கட்டணம் குறைப்பு.. தமிழ்நாட்டில் அதிகரிப்பு

Anbumani Ramadoss: மராட்டியத்தில் 26% மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 42% உயர்வு அடைந்துள்ளது. மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் என்கிறார் பா.ம.க.வின் அன்புமணி…

ஆட்சியாளர்கள் செய்யவே கூடாத குற்றம்.. தி.மு.க மீது அன்புமணி பாய்ச்சல்! Doctor Anbumani Ramadoss

ஆட்சியாளர்கள் செய்யவே கூடாத குற்றம்.. தி.மு.க மீது அன்புமணி பாய்ச்சல்!

Anbumani Ramadoss: நியாயவிலைக்கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ள பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், “வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com