Dr Ramadoss: “அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்” என பா.ம.க நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Dr Ramadoss: “அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்” என பா.ம.க நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Published on: September 21, 2025 at 2:27 pm
சென்னை, செப்.21, 2025: பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “கடந்த 1.4.2003 முதல் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்” என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழ் அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் பெயரளவில் மட்டுமே ஓய்வூதிய திட்டமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தாராள மனப்பான்மையுடனோ, கருணைத் தொகையோ அல்ல, மாறாக அரசினால் கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டிய அவர்கள் பணிக்கான அடிப்படை உரிமையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :சென்னை குடிநீர் செயலி.. அறிமுகப்படுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
தொடர்ந்து, “அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சி அடைகின்றன. இந்தியாவிலும் சட்டீஸ்கர், ஜார்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. பொருளாதார வளர்ச்சியும் அடைந்துள்ளன. ஆதலால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கினால் நிதி இழப்பு ஏற்படும் என்பதும், திட்டங்களை செயல்படுத்த இயலாமல் போய்விடும் என்பதும் ஏற்புடையதல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, “கடந்த 22 ஆண்டுகளாக போராடிவரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் பழைய ஓய்வு திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : சிறுநீரகத் திருட்டு வழக்கு; அன்புமணி ராமதாஸ் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com