PMK Anbumani Ramadoss: பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸின், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஜூலை 25-ஆம்
PMK Anbumani Ramadoss: பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸின், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஜூலை 25-ஆம்
Published on: July 22, 2025 at 3:40 pm
சென்னை, ஜூலை 22 2025: பா.ம.க தலைமையகம் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வரும் 25&ஆம் நாள் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் முதல்கட்ட விவரங்கள் வருமாறு:
ஜூலை 25 – திருப்போரூர் (நிகழ்ச்சி தொடக்க விழா)
ஜூலை 26 – செங்கல்பட்டு, உத்திரமேரூர்
ஜூலை 27 – காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் (காலை: வையாவூர் – நத்தப்பேட்டை ஏரிகள் மாசுபாடு பார்வையிடல் & நெசவாளர்களுடன் சந்திப்பு)
ஜூலை 28 – அம்பத்தூர், மதுரவாயில் (காலை: குப்பை எரிஉலை விழிப்புணர்வு நிகழ்ச்சி – மாத்தூர்)
ஜூலை 31 – கும்மிடிப்பூண்டி (காலை: அறிவுசார் நகரம் பார்வையிடல்)
ஆகஸ்ட் 1 – திருவள்ளூர், திருத்தணி
ஆகஸ்ட் 2 – சோளிங்கர், ராணிப்பேட்டை
ஆகஸ்ட் 3 – ஆற்காடு, வேலூர் (காலை: ராணிப்பேட்டை குரோமியம் மாசு பார்வையிடல்)
ஆகஸ்ட் 4 – வாணியம்பாடி, திருப்பத்தூர்
தொடர்ந்து, அடுத்தக்கட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று அன்புடன் பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நாஞ்சில் சம்பத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய வைகோ.. தமிழக அரசியலில் பரபரப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com