P Chidambaram: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சரான ப.சிதம்பரம் இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
P Chidambaram: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சரான ப.சிதம்பரம் இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Published on: September 16, 2025 at 11:59 am
சென்னை, செப்.16, 2025: இந்திய நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர், தொழில்முறை வழக்குரைஞர் என பன்முகம் கொண்ட ப. சிதம்பரம் (பழனியப்பன் சிதம்பரம்) இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ப. சிதம்பரம், 2017 முதல் 2018 வரை உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். மேலும், ப. சிதம்பரம் நான்கு முறை மத்திய நிதியமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
மேலும், ப. சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவுசெய்து, 1984 இல் மூத்த வழக்கறிஞரானார். டெல்லி மற்றும் சென்னையில் அவருக்கு அலுவலகம் உள்ளது. உச்ச நீதிமன்றம் உள்பட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் இவர் வாதாடியுள்ளார்.
1969ஆம் ஆண்டு காலகட்டங்களில் ப. சிதம்பரம் இடதுசாரி சிந்தனையில் மூழ்கி காணப்பட்டார். இந்நிலையில், தி இந்துவின் ஆசிரியரான என். ராம் மற்றும் மகளிர் ஆர்வலர் மைதிலி சிவராமன் ஆகியோருடன் இணைந்து, ரேடிகல் ரிவியூ என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
இந்நிலையில், 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டின் சிவகங்கை தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ப. சிதம்பரம் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், பின்னர் தமிழ்நாடு பிரதேச காங்கிரஸ் கமிட்டி பிரிவின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் மத்தியில் நிதியமைச்சராக பணியாற்றிய போது பல சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளார்.
இதையும் படிங்க : உத்தரப் பிரதேச பெண்ணுக்கு கிடைத்த, ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’.. எங்கு தவறு.. என்ன நடந்தது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com