Kanchipuram District Judge Semmal Case: டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Kanchipuram District Judge Semmal Case: டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Published on: September 23, 2025 at 5:38 pm
சென்னை, செப்.23, 2025: தனிப்பட்ட விரோதம் காரணமாக காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பூசிவாக்கம் பகுதியில் வசித்து வரும் முருகன் என்கிற சிமெண்ட் முருகன் என்பவர், நீதிமன்ற காவலராக பணிபுரிந்து வரும் லோகேஷ் என்பவரின் மாமனார் ஆவார்.
இவருக்கும் அப்பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையை சேர்ந்தவருக்கும் இடையே 2025 ஆகஸ்ட் மாதம் அடிதடி ஏற்பட்டது.
இந்தப் பேக்கரியில் நடந்த அடிதடி சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது ஒரு மாத காலமாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், டிஎஸ்பி-யை கைது செய்து சிறையில் அடைக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை நீதிபதி செம்மல் என்பவர் பிறப்பித்தார்.
இந்த நிலையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டதாக புகார்கள் எழுந்தன.
தொடர்ந்து, நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி நீதிபதி செம்மல் மீதான புகார் குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தன.
இதையடுத்து விஜிலென்ஸ் அறிக்கையை பதிவாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விஷ வாய்வு தாக்கி தூய்மைப் பணியாளர் மரணம்.. ரூ.40 லட்சம் இழப்பீடு.. அண்ணாமலை வலியுறுத்தல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com