மைசூரு- செங்கோட்டை இடையே தென்னக ரயில்வே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது.
மைசூரு- செங்கோட்டை இடையே தென்னக ரயில்வே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது.
Published on: August 26, 2024 at 4:53 pm
செங்கோட்டை-மைசூரு இடையே, தென்காசி, பெங்களுரு வழியாக முதல் முறையாக சிறப்பு ரெயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரெயில் செப்டம்பர் 4 மற்றும் 7 தேதிகளில் மைசூருவிலிருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண்: 06241) இரவு 9.20 மணிக்கு புறப்படும்.
மறுநாள் மாலை 4.50 மணிக்கு செங்கோட்டையில் வரும். மீண்டும் செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு (வண்டி எண்: 06242) செப்டம்பர் 5 மற்றும் 8 தேதிகளில் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மைசூருவை மறுநாள் பிற்பகல் 2.20 மணிக்கு அடையும்.
செங்கோட்டை-மைசூரு ரெயில் சேவை: தென்காசி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, செங்கோட்டை மற்றும் மைசூரு இடையே, புதிய சிறப்பு ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதால், பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ரயில், தென்காசி, விருதுநகர், திருச்சி, சேலம் வழியாக செல்லும்.
மைசூருவிலிருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.50 மணிக்கு செங்கோட்டையில் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com